காஞ்சீபுரம் நகராட்சி பகுதியில் சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு பிரசாரம்
காஞ்சீபுரம் நகராட்சி பகுதியில் சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் ஏகமுகன் தெரு பகுதியில் காஞ்சீபுரம் நகராட்சி தனி அலுவலர் அ.சர்தார் தலைமையில் நகராட்சி சுகாதார அலுவலர் முத்து, சுகாதார ஆய்வாளர் குமார், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள் பி.தணிகைவேல், சண்முக சுந்தரம் ஆகியோர் வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
அப்போது நகராட்சி தனி அலுவலர் சர்தார் கூறியதாவது:-
பொதுமக்கள் மட்கும் குப்பைகளை புதன்கிழமை தோறும் வரும் குப்பை வண்டிகளில் மட்டும் போடவேண்டும், மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து போடவேண்டும். கொசுக்கள் உருவாகும் ஆதாரங்களை பொதுமக்கள் அவரவர் பகுதியில் அழித்து டெங்கு காய்ச்சல் வராமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.