திண்டுக்கல்லில் அடுத்த மாதம் 9-ந்தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு கால்கோள் நடும் நிகழ்ச்சி

திண்டுக்கல்லில் அடுத்த மாதம் 9-ந்தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான கால்கோள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 8 அமைச்சர்கள் பங்கேற்றனர்.

Update: 2017-11-09 23:00 GMT
திண்டுக்கல்,

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல்லில் அங்கிங்கு பள்ளி வளாகத்தில், அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட இருக்கிறது. இதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

இதையொட்டி நூற்றாண்டு விழா நடத்தப்படும் அரங்கு அமைப்பதற்கான கால்கோள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். பின்னர் பூஜைகள் செய்யப்பட்டு கால்கோள் நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, பி.தங்கமணி, ஆர்.காமராஜ், ஆர்.பி.உதயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் டி.ஜி.வினய், முன்னாள் மேயர் மருதராஜ், வி.பி.பி. பரமசிவம் எம்.எல்.ஏ., மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்