சாதி சான்றிதழ் கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
விருத்தாசலத்தில் சாதி சான்றிதழ் கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை அருகே உள்ள அகரம் கிராமத்தில் இருளர் சமூகத்தை சேர்ந்த 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இப்பகுதி மாணவ- மாணவிகள் சாதி சான்றிதழ் கேட்டு கடந்த ஆண்டு விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தனர்.
ஆனால் விண்ணப்பித்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் அசோகன் தலைமையில் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திராவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது கிராம மக்கள், எங்களுக்கு இப்போதே சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கூறினர். இந்நிலையில் கிராம மக்கள் திடீரென கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாதி சான்றிதழ் வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் தாசில்தார் பன்னீர் செல்வம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டம் நடத்திய கிராம மக்களை சமாதானப்படுத்தினார். அதன் பிறகு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றனர்.
அங்கு அவர்கள், தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி கோஷங்கள் எழுப்பியபடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உயர் அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த முற்றுகை போராட்டங்கள் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.