டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

ராமநத்தம் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-09 22:45 GMT
விருத்தாசலம்,

ராமநத்தம் அருகே உள்ள பனையாந்தூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை, கிராம மக்கள் போராட்டத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.

இந்த நிலையில் டாஸ்மாக் அதிகாரிகள், ஏற்கனவே மூடப்பட்ட கடைக்கு பதிலாக பனையாந்தூரில் வேறு ஒரு இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

ஆர்ப்பாட்டம்

இதுபற்றி அறிந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க இருந்த கட்டிடத்துக்கு திரண்டு வந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் வராததால் கிராம மக்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை டாஸ்மாக் கடை அமைக்க இருந்த இடத்துக்கு கிராம மக்கள் மீண்டும் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் கிராம மக்கள் கோஷங்கள் எழுப்பி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்