நித்திரவிளை அருகே சிறுவனுக்கு அரிவாள் வெட்டு; 3 பேர் கைது

நித்திரவிளை,
நித்திரவிளையை அடுத்த பாலாமடம் பகுதியில் ஒரு கோழிக்கடை உள்ளது. அந்த கடையில் வேலை பார்த்த ஒருவரை, கடையில் இருந்து பணம் எடுத்ததாக கூறி உரிமையாளர் நீக்கி விட்டார். இந்த நிலையில் பணியில் இருந்து நீக்கப்பட்ட நபரின் தந்தை விஜயன் (45), தாய் அனிதா (40), உறவினர்கள் பிரபு, சுரேஷ் ஆகியோர் கோழிக்கடைக்கு சென்றனர். அங்கு கோழிக்கடை உரிமையாளர் இல்லை. அப்போது கோழிக்கடையில் 16 வயது சிறுவன் மட்டும் இருந்தான். இதனால் ஆத்திரமடைந்த கும்பல், அந்த சிறுவனை அரிவாளால் வெட்டியது. இதில் காயமடைந்த அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயன், பிரபு, சுரேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.