சிலை கடத்தல் வழக்கு: காதர் பாட்சா மீதான விசாரணை 23-ந்தேதிக்கு ஒத்திவைப்பு கோர்ட்டு உத்தரவு

சிலை கடத்தல் வழக்கில் காதர் பாட்சா மீதான விசாரணை 23-ந் தேதிக்கு ஒத்திவைத்து கும்பகோணம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2017-11-09 22:15 GMT
கும்பகோணம்,

விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை அருகே ஊரணிபுரத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஆரோக்கியராஜ் என்பவர் வீட்டில் 6 ஐம்பொன் சாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் வெளியே விற்றதாக துணை போலீஸ் சூப்பிரண்டு காதர்பாட்சாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி கும்பகோணத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்காக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காதர்பாட்சா கும்பகோணம் கோர்ட்டுக்கு அவ்வப்போது விசாரணைக்காக அழைத்து வரப்படுகிறார். இந்த நிலையில் நேற்று கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி காணொலிக் காட்சி மூலம் திருச்சி மத்திய சிறையில் உள்ள காதர்பாட்சாவிடம் விசாரணை செய்தார். பின்னர் இவ்வழக்கை வருகிற 23-ந்தேதிக்கு (வியாழக்கிழமை)ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்