விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டரை பாடையில் வைத்து நூதன போராட்டம்

விலை உயர்வை கண்டித்து பாபநாசத்தில் கியாஸ் சிலிண்டரை பாடையில் வைத்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-09 23:00 GMT
பாபநாசம்,

பாபநாசம் புதிய அண்ணா சிலை அருகில் பாபநாசம் ஒன்றிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சர்க்கரை விலை உயர்வை ரத்து செய்யக் கோரியும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், பாடையில் கியாஸ் சிலிண்டரை வைத்து நூதன போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் விஜயாள் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் மாலதி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி, மாவட்ட தலைவர் கலைச்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் காதர் உசேன், நகர செயலாளர் கணேசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்