தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ள கிராமங்களின் பட்டியலை கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்து உள்ளார்.

Update: 2017-11-09 20:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ள கிராமங்களின் பட்டியலை கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

அம்மா திட்ட முகாம்

அனைத்து கிராமங்களிலும் உள்ள அடித்தட்டு மக்களுக்கு சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள திட்டம் அம்மா திட்டம். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்ட முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்க உள்ளது.

தூத்துக்குடி தாலுகாவில் வடக்கு சிலுக்கன்பட்டி கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஸ்ரீமுலக்கரை கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகாவில் மெஞ்ஞானபுரம் கிராமத்திலும், சாத்தான்குளம் தாலுகாவில் முதலூர் கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகாவில் பிள்ளையார்நத்தம் கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகாவில் கீழவிளாத்திகுளம் பகுதி –1 கிராமத்திலும், எட்டயபுரம் தாலுகாவில் மேலஈரால் வாலம்பட்டி கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் தருவைகுளம் கிராமத்திலும், கயத்தார் தாலுகாவில் குருவிநத்தம் கிராமத்திலும் நடக்கிறது.

மனுக்கள் கொடுக்கலாம்

முகாமிற்கு அந்தந்த தாசில்தார்கள் தலைமை தாங்குகிறார்கள். முகாமில், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு – இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் கொடுக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்