பவானிசாகர் அருகே சசிகலாவின் ஆதரவாளர் காகித ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனை

பவானிசாகர் அருகே சசிகலாவின் ஆதரவாளர் காகித ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டார்கள்.;

Update: 2017-11-09 23:00 GMT

பவானிசாகர்,

தமிழகம் முழுவதும் நேற்று சசிகலா ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே இக்கரைதத்தப்பள்ளியில் காகித ஆலை உள்ளது. இந்த ஆலையின் இயக்குனராக முன்னாள் மணல் வியாபாரியான ஆறுமுகசாமி மகன் செந்தில்குமார் உள்ளார். இவர் சசிகலா மற்றும் தினகரனின் நெருங்கிய ஆதரவாளர் ஆவார்.

இந்த காகித ஆலை முன்பு நேற்று காலை 6 மணி அளவில் வருமான வரித்துறையினர் 6 பேர் காரில் வந்து இறங்கினார்கள். பின்னர் ஆலைக்குள் சென்று சோதனை நடத்தினார்கள்.

இதையொட்டி நுழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆலையில் வேலை செய்யும் ஆட்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அதேபோல் உள்ளே இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. நேற்று இரவு வரை வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்