அரசு மருத்துவமனையில் தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் செய்ய முயற்சி
திருச்சி அரசு மருத்துவமனையில் தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவருடைய மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் வடக்கு காட்டூர் திருநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகப்பாண்டி(வயது 35). காய்கறி கடை தொழிலாளி. இவர் தன்னை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பாலக்கரை சங்கிலியாண்டபுரம் மறைமலை அடிகளார் தெருவை சேர்ந்த ஆரிப் மற்றும் அவருடைய மனைவி ரம்ஜானிடம்(27) லட்சக்கணக்கில் பணம் கொடுத்தாக தெரிகிறது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆரிப் இறந்து விட்டதால் வெளிநாட்டுக்கு ஆறுமுகப்பாண்டியை அனுப்பவில்லை. இதனால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதற்காக நேற்று முன்தினம் காலை ரம்ஜான் வீட்டிற்கு சென்றார். இதனை தொடர்ந்து வீட்டில் ரம்ஜான் கத்திக்குத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்து கிடந்தார். அதே வீட்டில் ஆறுமுகப்பாண்டி தூக்கில் பிணமாகவும் தொங்கினார்.
இது குறித்து தகவலறிந்த பாலக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த ரம்ஜானை சிகிச்சைக்காகவும், ஆறுமுகப்பாண்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காகவும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரம்ஜான் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பணம் வாங்க சென்ற இடத்தில் தகராறு ஏற்பட்டிருக்கலாம், இதனால் ரம்ஜானை கத்தியால் குத்தி விட்டு, ஆறுமுகப்பாண்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் முதலில் விசாரணையை தொடங்கினர்.
ஆனால் ஆறுமுகப்பாண்டியின் மனைவி வசந்தி, தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பாலக்கரை போலீசில் ஒரு புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆறுமுகப்பாண்டி இறந்த தகவல் அறிந்து, அவருடைய உறவினர்கள் நேற்று காலை மருத்துவமனைக்கு வந்தனர். ஆறுமுகப்பாண்டியின் உடலில் காயங்கள் இருப்பதால், அவரை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம். எனவே இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, ஆறுமுகப்பாண்டியின் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து சென்ற அரசு மருத்துவமனை போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மருத்துவமனைக்குள் அழைத்து சென்றனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் ஸ்ரீரங்கம் போலீஸ் சரக உதவி கமிஷனர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான், ஆறுமுகப்பாண்டி எப்படி இறந்தார்? என்பது தெரியவரும். அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை போலீசார் எடுப்பார்கள் என்று கூறியதை தொடர்ந்து ஆறுமுகப்பாண்டியின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இதையடுத்து ஆறுமுகப்பாண்டியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மதியம் 1 மணியளவில் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ரம்ஜானை கத்தியால் குத்தி விட்டு, ஆறுமுகப்பாண்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று ரம்ஜான் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.