முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட 6 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு
முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கொலையில் சரணடைந்த 6 பேரை போலீசார் காவலில் விசாரித்து மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு சொகுசு கார், 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கண்டகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிநாராயணன் (வயது 37). விவசாயியான இவர் கண்டகானப்பள்ளி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர். இவருக்கும் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மாரசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி லட்சுமிநாராயணன் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த கொலை தொடர்பாக மாரசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் (30), பதி என்கிற வெங்கடாசலபதி (29), சுரேஷ் (26), தக்கட்டியைச் சேர்ந்த கெம்பன் என்கிற சுரேஷ் (27), பென்னங்கூரைச் சேர்ந்த அரிஸ் (27) ஆகியோர் கடந்த 26-ந் தேதி போச்சம்பள்ளி கோர்ட்டிலும், மாரசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (24) கடந்த 30-ந் தேதி கிருஷ்ணகிரி கோர்ட்டிலும் சரண் அடைந்தார். இதையடுத்து அவர்கள் 6 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் 6 பேரும் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க போலீஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 6 பேரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 6 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் நேற்று மீண்டும் தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மேகலா மைதிலி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.இதைத் தொடர்ந்து 6 பேரையும் வருகிற 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக போலீஸ் காவலில் அவர்கள் விசாரிக்கப்பட்டபோது அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கொலையின்போது அவர்கள் பயன்படுத்திய ஒரு சொகுசு கார், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கொலை தொடர்பாக போலீசார் தரப்பில் கூறும்போது, பண விவகாரத்தில் இந்த கொலை நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சரணடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரித்த நிலையில், அடுத்தகட்டமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் ஈடுபட உள்ளோம் என்றனர்.