டெங்கு கொசுப்புழு உற்பத்தியை தடுக்காத கிராம நிர்வாக அலுவலருக்கு கலெக்டர் நோட்டீஸ்
டெங்கு கொசுப்புழு உற்பத்தியை தடுக்காத கிராம நிர்வாக அலுவலருக்கு கலெக்டர் நோட்டீஸ் வழங்கி, 4 மணி நேரத்தில் தூய்மை செய்ய உத்தரவிட்டார்.
வேட்டவலம்,
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களும் இதனை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் கந்தசாமி தீவிரப்படுத்தி வருகிறார். தினமும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். டெங்கு கொசுப்புழு உற்பத்தியை தடுக்காதவர்களுக்கு அபராத நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை கீழ்கரிப்பலூர் கிராமத்திற்கு கலெக்டர் கந்தசாமி சென்று டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் கிராமத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகிறதா? என்று சோதனை செய்தார். அப்போது அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். அலுவலகத்தின் பின்புறம் தேங்கிய தண்ணீரில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகி இருந்ததை அவர் பார்த்தார். இதையடுத்து டெங்கு கொசுப்புழு உற்பத்தியை தடுக்காத கிராம நிர்வாக அலுவலர் 4 மணி நேரத்தில் அலுவலக சுற்றுப்புறத்தை தூய்மையாக மாற்ற வேண்டும் என்று எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அரசு பள்ளிக்கு சென்று மாணவ- மாணவிகளிடம் டெங்கு காய்ச்சல் குறித்து கேட்டார். பின்னர் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
வேட்டவலம் அருகே கல்லணை கரிப்பூர் பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டபோது பொதுமக்கள் கலெக்டரிடம் நாங்கள் ஆவூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றால் சிகிச்சை அளிக்க மறுக்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களது கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றனர். அதற்கு கலெக்டர் வாரத்திற்கு ஒரு நாள் இக்கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் அமைக்கப்படும். சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின் போது தாசில்தார் சுகுணா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புருஷோத்தமன், கருணாகரன், வருவாய் ஆய்வாளர் பாணு, இன்ஸ்பெக்டர் செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.