கருப்பு சட்டை அணிந்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கண்டனம்
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து நேற்று நாமக்கல் மற்றும் பரமத்திவேலூரில் தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்,
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு காரணமாக இந்திய பொருளாதாரம் சீரழிந்து விட்டதாகவும், அதற்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் நேற்று தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல்லில் உள்ள அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. துணை பொது செயலாளர் வி.பி.துரைசாமி தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் மணிமாறன் வரவேற்று பேசினார். கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன், முன்னாள் மத்திய மந்திரி காந்திசெல்வன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஷேக்நவீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வி.பி.துரைசாமி பேசும்போது கூறியதாவது:-
யாருடைய யோசனையையும் கேட்காமல் பிரதமர் மோடி தன்னிச்சையாக இந்த முடிவை அறிவித்ததால், தனிமனிதன் தான் சேர்த்து வைத்த பணத்தை வங்கியில் இருந்து எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டான்.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 5.25 சதவீதமாக குறைந்தது. மேலும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. எனவே ஆட்சி மாற்றம் ஒன்று தான் இதற்கு தீர்வு. தமிழகத்தில் தி.மு.க.வும், மத்தியில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சிக்கு வர இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.ராமசாமி, பொன்னுசாமி, சம்பத்குமார், இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர்கள் டாக்டர் செழியன், ஜி.ஆர்.சுப்பிரமணியம், மாவட்ட பொதுச்செயலாளர் குமரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆதிதமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
குறிப்பாக இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பரமத்திவேலூர் காமராஜர் சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.மூர்த்தி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரதாப் சக்கரவர்த்தி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுந்தர், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், தங்கவேல், பழனிவேல், யுவராஜ், மாவட்ட, பேரூர் மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள் உள்பட தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து திரளாக கலந்து கொண்டனர்.