பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நேற்று புதுவை பிருந்தாவனத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி,
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நேற்று புதுவை பிருந்தாவனத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் விசுவநாதன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் செயலாளர்கள் பெருமாள், முருகன், கம்யூனிஸ்டு (எம்.எல்.) செயலாளர் சோ.பாலசுப்ரமணியன், விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.