சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கூலித்தொழிலாளிகள் 2 பேர் சாவு
போடியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கூலித்தொழிலாளிகள் 2 பேர் பரிதாபமாக செத்தனர்.
போடி,
போடி புதூர் வலசத்துறை ரோட்டை சேர்ந்தவர்கள் மாயாண்டி (வயது 52), முருகன் (50). இவர்கள் 2 பேரும் கூலித்தொழிலாளர்கள். நேற்று இவர்கள், போடி அருகே உள்ள வலசத்துறை பகுதியில் விறகு சேகரிக்க சென்றனர். பின்னர் மதியம் சாப்பிட்டு விட்டு, அங்குள்ள இலவம் பஞ்சு தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் ஓரத்தில் ஓய்வெடுத்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் மாயாண்டியும், முருகனும் இடிபாடுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் சம்பவ இடத்திலேயே மாயாண்டி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவருடைய உடல் மீட்கப்பட்டது. படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய முருகனை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக செத்தார். இதுகுறித்து போடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் வழக்கம் போல மழை பெய்தது.
இந்த மழையினால், இலவம் பஞ்சு தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் நனைந்து பலமிழந்து காணப்பட்டது. அது தெரியாமல், கூலித்தொழிலாளிகள் 2 பேரும் அங்கு ஓய்வு எடுத்தபோது சுவர் இடிந்து தங்களது உயிரை இழந்து விட்டனர். இறந்த மாயாண்டிக்கு அன்னலட்சுமி என்ற மனைவியும் 2 மகள்களும், முருகனுக்கு ஜோதி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். சுற்றுச்சுவர் இடிந்து 2 பேர் பலியான சம்பவம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் பெரியகுளம் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அதேபகுதியை சேர்ந்த அந்தோணியின் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை. வீட்டில் இருந்த பொருட்கள் மட்டும் சேதமடைந்தன.