மேட்டுப்பாளையம் அருகே கன மழைக்கு தண்டவாளத்தில் பாறை விழுந்தது
மேட்டுப்பாளையம் அருகே கன மழை காரணமாக தண்டவாளத்தில் பாறை விழுந்ததால் மலை ரெயில் 45 நிமிடம் தாமதமாக குன்னூர் சென்றது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மழையினால் குளங்கள், அணைகள் நிரம்பி வருகின்றன. இதற்கிடையே பருவ மழையின்போது குன்னூர், மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் அடிக்கடி மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்து ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழைநீர் வழிந்தோடியது. மேலும் குன்னூர்- மேட்டுப்பாளையம் ரெயில்பாதையில் அடர்லி- ஹில்குரோவ் இடையே உள்ள தண்டவாளத்தில் ஒரு பாறை உருண்டு விழுந்தது.
நேற்று வழக்கம் போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரெயில் காலை 7. 10 மணிக்கு புறப்பட்டது. அப்போது தண்டவாளத்தில் பாறை விழுந்த தகவல் தெரிந்தவுடன் ரெயில் அடர்லி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரெயில்வே ஊழியர்கள் ரெயில் பாதையில் ரோந்து சென்று பாறை விழுந்த இடத்தை கண்டறிந்தனர்.மேலும் இது குறித்து குன்னூர் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் 30 பேர் சம்பவ இடத்திற்கு சென்று பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பாறையை வெடி வைத்து தகர்த்தால் தண்டவாளம் சேதம் அடைந்து விடும் என்பதால் உளியை வைத்து பாறையை உடைத்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் ரெயில் புறப்பட்டு பாறை விழுந்த இடத்தை கடந்து குன்னூரை அடைந்தது. காலை 10.30 மணிக்கு வந்து சேரவேண்டிய மலை ரெயில் 45 நிமிடம் தாமதமாக காலை 11.15 மணிக்கு குன்னூரை அடைந்தது. தொடர்ந்து அங்கிருந்து மலை ரெயில் புறப்பட்டு ஊட்டியை சென்ற டைந்தது.