பால்கர் மாவட்டத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் தேவேந்திர பட்னாவிஸ் இன்று தொடங்கி வைக்கிறார்
பால்கர் மாவட்டத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகளை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று தொடங்கி வைக்கிறார்.
தானே,
பால்கர் மாவட்டத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகளை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று தொடங்கி வைக்கிறார்.
பால்கர் மாவட்டம்மராட்டியத்தின் 36–வது மாவட்டமாக பால்கர், கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்டு 1–ந் தேதி உதயமானது. பெரும்பாலான பழங்குடியின மக்களை கொண்டுள்ள இந்த மாவட்டத்தில், புதிய கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவகம், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம், மாவட்ட செசன்சு கோர்ட்டு, ஓய்வு இல்லம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவற்றை கட்ட மாநில அரசு முடிவு செய்தது.
பட்னாவிஸ் அடிக்கல் நாட்டுகிறார்இதற்காக ரூ.3 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கட்டுமான பணியை மேற்கொள்ளும் பொறுப்பு ‘சிட்கோ’விடம் (நகர தொழில் மேம்பாட்டு கழகம்) ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், மேற்படி வளர்ச்சி பணிகளுக்கான பூமி பூஜை இன்று (புதன்கிழமை) பால்கரில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். பெரும்பாலான மந்திரிகளும் பங்கேற்கின்றனர்.
ஏற்கனவே, பால்கர் மாவட்டம் தானே மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.