கன்டெய்னர் லாரி தீப்பிடித்து ரூ.20 லட்சம் டயர், டியூப்புகள் எரிந்து நாசம் போலீசார் விசாரணை
ராயக்கோட்டையில் கன்டெய்னர் லாரி தீப் பிடித்த விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள டயர், டியூப்புகள் எரிந்து நாசம் ஆனது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயக்கோட்டை,
மத்திய பிரதேச மாநிலம் பேண்டூரில் இருந்து, டயர் மற்றும் டியூப்புகளை ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி, சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரி ராயக்கோட்டை பக்கமாக வந்தபோது டிரைவர் சாலையோரமாக லாரியை நிறுத்திவிட்டு டீக்குடிக்க சென்றார்.
அந்த நேரம் லாரியின் பின்பகுதியில் தீப்பிடித்து புகை வந்தது. இதையடுத்து டிரைவர் கதவை திறந்து பார்த்தபோது உள்ளே டயர் மற்றும் டியூப்புகள் எரிந்து கொண்டிருந்தன. இதுகுறித்து ராயக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து டயர் நிறுவன முகவர் ராஜா (வயது 35) என்பவர் ராயக்கோட்டை போலீசில் நேற்று புகார் செய்தார்.
அதில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள டயர் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்புள்ள டியூப்புகள் எரிந்து நாசம் ஆனதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.