பெங்களூருவில் சங்கிலி பறிப்பில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் போலீஸ் கமி‌ஷனர் எச்சரிக்கை

பெங்களூருவில், தொடர் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுனில் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-11-07 21:00 GMT

பெங்களூரு,

பெங்களூருவில், தொடர் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுனில் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தங்க சங்கிலிகள் பறிப்பு

பெங்களூருவில் அடிக்கடி தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் தங்க சங்கிலி பறிப்புகள் மட்டும் குறைந்தபாடில்லை. இதற்கிடையே, கடந்த சில நாட்களாக நகரில் நடைபெறும் தங்க சங்கிலி பறிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக, பல்வேறு வழக்குகள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த படாரியா மற்றும் மராட்டியத்தை சேர்ந்த இரானி ஆகிய கும்பலை சேர்ந்தவர்கள் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபடுவதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும், தங்க சங்கிலி பறிப்புகளை கட்டுப்படுத்த போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுனில் குமார் உத்தரவு பிறப்பித்தார்.

குண்டர் சட்டம் பாயும்

இதன் தொடர்ச்சியாக பெங்களூரு மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுனில் குமார் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, தொடர் சங்கிலி பறிப்பு மற்றும் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி நகை–பணம் பறிக்கும் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதல்கட்டமாக, பெங்களூருவில் 80 தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தபரேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மேலும் செய்திகள்