ஈரோட்டில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஓடும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஈரோடு ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-11-07 22:45 GMT

ஈரோடு,

ரெயில் என்ஜின் டிரைவர்கள் மது அருந்தி உள்ளனரா? என்று பரிசோதிக்கப்படும் கருவியை நவீனப்படுத்த வேண்டும். ஈரோடு கோட்டத்தில் உள்ள என்ஜின் டிரைவர்களுக்கு சீருடைகளுக்கான பணத்தை கொடுக்க வேண்டும். பழுதடைந்த வாக்கிடாக்கிகளை அப்புறப்படுத்தி புதிய வாக்கி டாக்கிகளை வாங்கி கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஓடும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஈரோடு ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் வி.ஆர்.பிரகாஷ் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து சங்க கிளை தலைவர் அருண்குமா£ர் கூறும்போது, ‘‘மது அருந்தி உள்ளனரா? என்று பரிசோதிக்கும் கருவியில் அனைவருக்கும் ஒரே ஊதுகுழாய் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பலருக்கும் நோய் பரவுகிறது. எனவே கருவியை நவீனப்படுத்த வேண்டும் என்று திருவனந்தபுரத்தில் ஒரு என்ஜின் டிரைவரும், உதவி டிரைவரும் கூறினார்கள். அதற்கு அவர்களுக்கு 5 ஆண்டுகள் பதவி இறக்கம் செய்யப்பட்டது. இதை கண்டித்தும், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது’’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் என்ஜின் டிரைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்