அதிர்ச்சியில் உயிரிழந்த கட்டிட தொழிலாளியின் உறவினர்கள் மறியல்

விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சீனிவாசபெருமாள் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த போது கட்டிடச் சுவர் திடீரென இடிந்து விழுந்த அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

Update: 2017-11-07 22:45 GMT
விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தத்தைச் சேர்ந்தவர் சீனிவாசபெருமாள்(வயது 40). கட்டிட தொழிலாளியான இவர் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த போது கட்டிடச் சுவர் திடீரென இடிந்து விழுந்த அதிர்ச்சியில் உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவ பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது.

 இந்த நிலையில் கட்டிட உரிமையாளரை கைது செய்யக் கோரி சீனிவாசபெருமாளின் உறவினர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். போலீசார், கட்டிட உரிமையாளர் தங்கசொர்ணராஜாவை (55) கைது செய்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்