ரேஷன் கடை அமைக்கவும், விலையில்லா ஆடுகள் வழங்க கோரியும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை

அகரம்சீகூர் ஊராட்சியில் ரேஷன் கடை அமைக்கவும், விலையில்லா ஆடுகள் வழங்க கோரியும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-07 22:45 GMT
மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள அகரம்சீகூர் ஊராட்சியில் ராசி நகர், கோகுலம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்கள் தங்கள் ரேஷன் கார்டுக்கு உரிய பொருட்கள் வாங்க ரேஷன் கடைக்கு 2 கி.மீ. தூரம் செல்ல வேண்டி உள்ளது. மேலும் இந்த ரேஷன் கடையில் அரிசி, சர்க்கரை, பாமாயில் என ஒவ்வொரு நாளும் ஒரு பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் அனைத்து பொருட்களும் வாங்க முடியாமலும், அதிகப்படியான அலைச் சல் ஏற்பட்டும் வந் துள்ளது.

முற்றுகை போராட்டம்

இதையடுத்து அகரம்சீகூர் பஸ்நிலையம் அருகே, கிராம நிர்வாக அலுவலகம் பக்கத்தில் உள்ள அரசு கட்டிடத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும். விலையில்லா ஆடுகள் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே தகுதியான பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி அகரம் சீகூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வள்ளி பாண்டியன் தலைமையில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்