நாகர்கோவில் அருகே தனியார் ஆலையில் திடீர் தீ விபத்து

நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்துக்கும், சுங்கான்கடைக்கும் இடைப்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஜல்லி– தார் கலவை தயாரிக்கும் ஆலை உள்ளது. நேற்று காலையில் அந்த ஆலையில் ஜல்லி– தார் கலவைக்கு பயன்படுத்தும் ஆயில் டேங்க் ஒன்றில் திடீரென தீப்பிடித்தது.

Update: 2017-11-07 22:45 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்துக்கும், சுங்கான்கடைக்கும் இடைப்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஜல்லி– தார் கலவை தயாரிக்கும் ஆலை உள்ளது. நேற்று காலையில் அந்த ஆலையில் ஜல்லி– தார் கலவைக்கு பயன்படுத்தும் ஆயில் டேங்க் ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. உடனே இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி கல்யாணகுமார் தலைமையில் நாகர்கோவில் நிலைய அதிகாரி அழகர்சாமி மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் 30 நிமிட போராட்டத்துக்குப்பிறகு ஆயில் டேங்கில் பற்றி எரிந்த தீயை முழுமையாக அணைத்தனர். இந்த தீவிபத்து எப்படி ஏற்பட்டது? என்ற விவரம் தெரியவில்லை.

மாலையில் நாகர்கோவில் நகரப்பகுதியில் திடீரென இடி– மின்னலுடன் மழை பெய்தது. அப்போது கோட்டார் பகுதியில் தனியார் நிலத்தில் இருந்த மரத்தில் இடி விழுந்து தீப்பிடித்தது. உடனே இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நாகர்கோவில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

மேலும் செய்திகள்