பயங்கரவாத வழக்கில் 3 பேர் விடுதலை நெல்லை கோர்ட்டு உத்தரவு
பயங்கரவாத வழக்கில் 3 பேர் விடுதலை நெல்லை கோர்ட்டு உத்தரவு
நெல்லை,
நெல்லையில் கடந்த 2008–ம் ஆண்டு சுதந்திர தின விழாவை சீர்குலைக்க முயற்சி செய்ததாக பேட்டை போலீசார் 3 பேரை கைது செய்தனர். நெல்லை பேட்டையை சேர்ந்த அப்துல் கபூர், டவுனை சேர்ந்த ஹீரா மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அலி அப்துல்லா ஆகியோரை பயங்கரவாதிகள் என்று கூறி போலீசார் கைது செய்தனர். அதாவது வெடிகுண்டு தயாரித்து நெல்லையில் முக்கிய இடங்களை தகர்க்க இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. அப்போது இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட 4–வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதி கிளாட்சன் பிளசட் தாகூர் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அப்துல் கபூர் உள்பட 3 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.