கொண்டலாம்பட்டி அருகே கோஷ்டி மோதல்; 8 பேர் கைது

கொண்டலாம்பட்டி அருகே கோஷ்டி மோதல்; 8 பேர் கைது

Update: 2017-11-06 22:15 GMT
கொண்டலாம்பட்டி,

கொண்டலாம்பட்டி அருகே உள்ள சிவதாபுரம் மலங்காட்டான் தெருவை சேர்ந்தவர்கள் வரதராஜன் (வயது 23), சதீஷ்குமார்(24). இவர்கள் இருவரது வீட்டுக்கும் அருகே மேச்சேரி காளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இந்த கோவில் முன்புள்ள திண்ணையில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற தனசேகரன் (24) தனது நண்பர்களுடன் வந்தார். பின்னர் கோவில் முன்பு தனசேகரன் அவரது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்ததாகவும், அப்போது அதை வரதராஜனும், சதீஷ்குமாரும் தட்டிக்கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்பினரும் அடிதடி தகராறில் ஈடுபட்டு கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இதில் காயம் அடைந்த சதீஷ்குமார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் இருதரப்பினர் கொடுத்த புகார்களின் பேரில் வழக்குகள் பதிவு செய்து இருதரப்பை சேர்ந்த வரதராஜன், சஞ்சய், ஸ்ரீதர், ரவிக்குமார், பிரசாந்த், பிரவீன், பார்த்திபன், தனுஷ் என்ற தனசேகரன் ஆகிய 8 பேரை கைது செய்தார். சபரி மற்றும் பாலு ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்