வேப்பந்தட்டை அருகே சிறுமியை கடத்திய வழக்கில் 4 பேர் கைது

வேப்பந்தட்டை அருகே சிறுமியை கடத்திய வழக்கில் 4 பேர் கைது

Update: 2017-11-06 22:15 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என்று வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் கொடுத்தார். இதனைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை யாரேனும் கடத்தி சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், வண்ணாரம்பூண்டியை சேர்ந்த அஜித் (20) என்பவர் சிறுமியை கடத்தியதும், அவருக்கு உதவியாக இருந்த அதே ஊரை சேர்ந்த அசரப் அலி (21), வாலிகண்டபுரத்தை சேர்ந்த முகமதுஅலி (23), அரியலூர் மாவட்டம் குடிகாடு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (21) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அஜித் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்