திருத்துறைப்பூண்டி அருகே கன மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் என்ஜினீயர் பலி

திருத்துறைப்பூண்டி அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் என்ஜினீயர் பலியானார்.

Update: 2017-11-06 23:00 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலமருதூர் மேலசேத்தியை சேர்ந்தவர் ரவிசந்திரன். இவர் வங்கியில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், வைஷ்ணவரூபி(வயது23) என்ற மகளும் உள்ளனர். வைஷ்ணவரூபி என்ஜினீயராவார். இந்த நிலையில் நேற்று மதியம் வைஷ்ணவரூபி வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் வீட்டின் சுவர் இடிந்து வைஷ்ணவரூபி மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலை அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் வல்லவராணி, தாசில்தார் மகேஷ்குமார், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் உள்பட பலர் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதை தொடர்ந்து என்ஜினீயர் வைஷ்ணவரூபியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்