துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மீனவர்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மீனவர்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தனர்.

Update: 2017-11-06 23:15 GMT

புதுச்சேரி,

புதுவை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் தினமும் விசைப்படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். துறைமுக முகத்துவாரத்தில் அடிக்கடி மணல் சேர்ந்து விடுவதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனை தொடர்ந்து அரசு நடவடிக்கை எடுத்து ஆண்டு தோறும் துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரி வருகிறது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு நிறுவனம் மூலம் ரூ.16 கோடி செலவில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணி இன்னும் முழுவதுமாக முடியவில்லை. எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால் மீனவர்களுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்கள், கண்ணா விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று காலை தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்காய்திட்டு துறைமுக முகத்துவார பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கருப்பு கொடி ஏந்தியும், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்