முகநூல் பக்கத்தை முடக்கிய மாடல் அழகி உள்பட 2 பேர் கைது

தொழில்அதிபரின் முகநூல் பக்கத்தை முடக்கி படங்களை அழித்ததாக மாடல் அழகி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2017-11-05 22:14 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் வசித்து வரும் தொழில்அதிபர் ஒருவர் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தை முடக்கிய மர்மநபர்கள் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்த படங்களை அழித்துவிட்டார்கள் என்று சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையின்போது, தொழில்அதிபரின் முகநூல் பக்கத்தை முடக்கி, அதில் இருந்த படங்களை அழித்ததாக மாடல் அழகி ஒருவரையும், அவருடைய நண்பரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் நாகரபாவியில் வசித்து வரும் கரிஷ்மா (வயது 24), தூரவாணி நகரில் வசித்து வரும் பவன்குமார் (24) என்பது தெரியவந்தது.

கைதான 2 பேரும் எதற்காக தொழில்அதிபரின் முகநூல் பக்கத்தை முடக்கினர் என்பது தெரியவில்லை. கைதானவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ஒரு மடிக்கணினி ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்