சாலையில் உள்ள பள்ளங்களில் கருங்கற்களை போட்டு செடிகளை நட்டு சென்ற மர்ம ஆசாமிகள்
முளகுமூட்டில், பழுதடைந்த சாலையில் உள்ள பள்ளங்களில் கருங்கற்களை போட்டு செடிகளை நட்டு சென்ற மர்மஆசாமிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
முளகுமூடு,
முளகுமூட்டில் இருந்து குளச்சலுக்கு ஒரு சாலை செல்கிறது. இதன் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலை நீண்ட நாட்களாக பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. எனவே, இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டும் இதுவரை பணி தொடங்க வில்லை. இதனால், அந்த பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில், நேற்று முன்தினம் முளகுமூடு பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டின் கட்டுமான பணிக்காக கருங்கற்கள் கொண்டு வந்தார். அந்த கற்கள் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் சாலையோரம் கிடந்த கருங்கற்களை தூக்கி சாலையில் உள்ள பள்ளங்களில் போட்டனர். அத்துடன் சாலையில் செடிகளை நட்டு விட்டு அங்கிருந்து தலைமறைவானார்கள்.
நேற்று காலையில் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் கருங்கற்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களின் உதவியுடன் கற்களை அப்புறப்படுத்தினர். மேலும், கற்களை போட்ட மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி பள்ளங்களில் கருங்கற்களை போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.