காதலை கைவிடுவதற்காக உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை
காதலை கைவிடுவதற்காக உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்ட இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். காதலன் விஷம் குடித்ததால் அவர் இந்த பரிதாப முடிவை தேடிக்கொண்டார்.
அழகியமண்டபம்,
நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமி (வயது 22). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்தது. காதல் விவகாரம் ஸ்ரீலட்சுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவரை பெற்றோர் கண்டித்தனர். ஆனாலும் ஸ்ரீலட்சுமி அந்த வாலிபருடன் தொடர்பில் இருந்து வந்தார். இதனால் ஸ்ரீலட்சுமியின் பெற்றோர், காதலை கைவிடுவதற்காக அவரை இரணியல் அருகே ஆலங்கோட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தனர். அங்கிருந்தபடியும் அவர் காதலனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிவந்தார். அப்போது காதலர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
காதலன் விஷம் குடித்தார்
இந்த தகவல் ஸ்ரீலட்சுமியின் காதலன் வீட்டாருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலனை கண்டித்ததோடு அவரை வீட்டில் சிறை வைத்தனர். இதில் மனம் உடைந்த வாலிபர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காதலன் விஷம் குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவல் ஸ்ரீலட்சுமிக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மனம் உடைந்தார்.
தற்கொலை
சம்பவத்தன்று ஸ்ரீலட்சுமியும் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஸ்ரீலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து ஸ்ரீலட்சுமி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலன் விஷம் குடித்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.