தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருட்டு
பெரம்பலூரில் தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் முத்துநகர் கிழக்கு முதல்தெருவை சேர்ந்தவர் செல்லையா. ஆதிதிராவிடர் நலப்பள்ளி தலைமை ஆசிரியராக இவர், பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் மீண்டும் நேற்று காலை திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு செல்லையா அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
பின்னர் இது குறித்து பெரம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். செல்லையா குடும்பத்துடன் வெளியே செல்வதை நன்கு நோட்டமிட்டே இந்த திருட்டு சம்பவத்தை மர்ம நபர்கள் அரங்கேற்றியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
பெரம்பலூர் நகரில் கடந்த சில மாதங்களாக திருட்டு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் குடும்பத்துடன் வெளியூர் சென்றாலும், பாதுகாப்புக்காக வீட்டில் ஒருவரை தங்க வைத்துவிட்டு தான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் உரிய நடவடிக்கை எடுத்து திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை பிடிக்க வேண்டும். திருட்டு போன நகைகளை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.