மலைப்பட்டி உப்பாற்று ஓடையில் இருந்து ஓட்டப்பிடாரம் பெரிய குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம்
மலைப்பட்டி உப்பாற்று ஓடையில் இருந்து ஓட்டப்பிடாரம் பெரியகுளத்துக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கலெக்டர் வெங்கடேஷ் நேற்று ஆய்வு செய்தார்.
ஓட்டப்பிடாரம்,
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மணியாச்சி, ஒட்டநத்தம், கடம்பூர், கயத்தார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்யும் மழைநீர் உப்பாற்று ஓடை வழியாக வந்து கோரம்பள்ளம் குளத்துக்கு வந்தடைகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையால் உப்பாற்று ஓடையில் உடைப்பு ஏற்பட்டு தூத்துக்குடி பகுதியில் வெள்ளம் புகுந்தது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உப்பாற்று ஓடை கரைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதா? அடைப்புகள் அகற்றப்பட்டு உள்ளதா? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் நேற்று காலை ஆய்வு செய்தார். அவர் புதுக்கோட்டை, சவரிமங்கலம், கொம்பாடி, ஒட்டநத்தம், மலைப்பட்டி, கடம்பூர் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.
மேலும் உப்பாற்று ஓடை வழியாக அதிகப்படியான தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுப்பதற்காக மலைப்பட்டியில் இருந்து கால்வாய் அமைத்து ஓட்டப்பிடாரம் பெரியகுளம், புதியம்புத்தூர் மலர்க்குளம் ஆகியவற்றுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு பொதுப்பணித்துறை மூலம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், கோரம்பள்ளம் ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர்கள் ஜவகர், சங்கர், ஓட்டப்பிடாரம் தாசில்தார் நம்பிராயர், மண்டல துணை தாசில்தார் இசக்கிராஜ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.