தூத்துக்குடி மாவட்டத்தில் இடைவிடாத சாரல் மழை உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின

தூத்துக்குடி மாவட்டத்தில் இடைவிடாத சாரல் மழை பெய்தது. இதனால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-11-05 23:00 GMT
தூத்துக்குடி,

வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் மாவட்டத்தில் பல இடங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தது. இந்த சாரல் மழை நேற்று மதியம் வரை நீடித்தது. நேற்று மதியத்துக்கு பிறகு லேசான வெயில் அடித்தது.

இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவர்கள் விவசாய பணிகளை தொடங்கி இருக்கின்றனர். அதே நேரத்தில் தூத்துக்குடியில் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியதால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

மழை அளவு விவரம்

நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

திருச்செந்தூர் - 4

காயல்பட்டினம் - 2.4

குலசேகரன்பட்டினம்- 25

காடல்குடி - 3

வைப்பார் - 3

கயத்தார் - 7

கடம்பூர் - 4

கழுகுமலை - 2

ஓட்டப்பிடாரம் - 1

வேடநத்தம் - 4

கீழஅரசடி - 3

எட்டயபுரம் - 2

சாத்தான்குளம் - 5.2

தூத்துக்குடி - 10.6

மேலும் செய்திகள்