மின்னல் தாக்கி விவசாயி பலி நாற்று பறிக்கும் பணியின் போது பரிதாபம்

பாபநாசம் அருகே வயலில் நாற்று பறிக்கும் பணியின் போது மின்னல் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2017-11-05 22:45 GMT
பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா திருவையாத்துக்குடி கிராம் காலனி தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). விவசாயி. இவருக்கு வெண்ணிலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான வயலில் முருகேசன் நாற்று பறிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது முருகேசனை மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் தாசில்தார் வெங்கடாசலம், துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் பிராங்க்ளின், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். மேலும், பாபநாசம் போலீசார் அங்கு வந்து முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்