ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது வினாடிக்கு 4 ஆயிரத்து 200 கனஅடி வருகிறது
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 200 கனஅடி வந்துகொண்டிருந்தது.
பென்னாகரம்,
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது. அதன்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.
குளித்து மகிழ்ந்தனர்
நேற்று விடுமுறைதினத்தையொட்டி ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்த அளவிலேயே இருந்தது. இதையொட்டி அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு, மெயின் அருவி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் சிலர் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் தொங்கு பாலம், பார்வைகோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நின்றவாறு காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.