பால்கர் மாவட்டத்துக்கு புதிய நிர்வாக அலுவலக கட்டிடங்கள்

ரூ.3,800 கோடி செலவில் பால்கர் மாவட்டத்துக்கு புதிய நிர்வாக அலுவலக கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.;

Update: 2017-11-05 22:45 GMT

மும்பை,

பால்கர் மாவட்டம் தோன்றி 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது பால்கர் நவ்நகரில் புதிதாக மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் கட்டப்பட உள்ளன.

மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம், அரசு விருந்தினர் மாளிகை உள்ளிட்ட நிர்வாக அலுவலகங்கள் மற்றும் கோர்ட்டு, அரசு குடியிருப்புகள் 440.37 ஹெக்டேர் பரப்பளவில் ஒரே இடத்தில் அமைகின்றன.

இந்த பணிகள் ரூ.3 ஆயிரத்து 800 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன. பால்கர் மாவட்ட நிர்வாக அலுவலகங்களை கட்டும் பணிகளை சிட்கோ மேற்கொள்கிறது.

இதற்கான பூமி பூஜை வருகிற 8–ந் தேதி(புதன்கிழமை) நடக்கிறது. இதில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் செய்திகள்