மதுரை அரசரடியில் வேரோடு மரம் சாய்ந்து விழுந்தது; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மதுரை அரசரடி செல்லத்தம்மன் கோவில் அருகே புளியமரம் உள்ளது. மதுரையில் நேற்று மாலை லோசன காற்றுடன் மழை பெய்தது.

Update: 2017-11-05 21:15 GMT

மதுரை,

மதுரை அரசரடி செல்லத்தம்மன் கோவில் அருகே புளியமரம் உள்ளது. மதுரையில் நேற்று மாலை லோசன காற்றுடன் மழை பெய்தது. இதனால் மாலை 5½ மணியளவில் அந்த புளியமரம் திடீரென வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 மேலும் மரம் விழுந்ததில் அருகிலிருந்த மின்சார வயர் அறுந்ததால் மின்அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. சம்பவம் குறித்து அறிந்ததும் மதுரை திடீர்நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த பணிகள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பாதையில் செல்லும் டவுன் பஸ்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. மின் வயர்கள் அறுந்ததால் நேற்று நள்ளிரவு வரை மின்சாரம் இல்லாமல் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

மேலும் செய்திகள்