கோவையில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு பாரத் சேனா சார்பில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
கோவை,
இந்து தீவிரவாதம் பரவுவதாக நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு பாரத் சேனா சார்பில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தொண்டாமுத்தூர் நகர செயலாளர் செந்தில்குமார், செய்தி தொடர்பாளர் டி.எம்.சுரேஷ், ஸ்டோன்சரவணன், அமைப்பாளர் வினோத், பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், அவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று கமல்ஹாசனை கைது செய்யக் கோரி மனு அளித்தனர்.
இது குறித்து மாவட்ட தலைவர் மணிகண்டன் கூறுகையில், இந்துக்கள் பற்றி நடிகர் கமல்ஹாசன் அவதூறாக பேசி வருகிறார். அவரை கைது செய்ய வேண்டும். அவர் யாருடைய கைப்பாவையாக செயல்படுகிறார் என்பது தெரியவில்லை. அவர் இந்துக்களுக்கு எதிராக பேசினால் அவரது திரைப்படத்தை ஓட விடமாட்டோம். வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.