செங்குன்றம் அருகே 200 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது பொதுமக்கள் அவதி

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர், பெருமாளடிபாதம் ஆகிய பகுதிகளில் 500–க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்தன.;

Update: 2017-11-05 23:00 GMT

செங்குன்றம்,

மறைமலைநகர்–எண்ணூர் புறவழி சாலை அமைப்பதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த்துறையினரால் 200–க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன. இவர்களுக்கு மாற்று இடமாக செங்குன்றத்தை அடுத்த விஜயநல்லூர் அருகே இடம் வழங்கப்பட்டது.

அந்த இடத்தில் தற்போது 200–க்கும் மேற்பட்டோர் வீடுகளை கட்டி வசித்து வருகிறார்கள். இது தாழ்வான பகுதி என்பதால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்தது. மழைநீர் வெளியேற வசதி இல்லாததால் 200 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து கடந்த 5 நாட்களாக அவதிப்பட்டு வருகிறோம். இதுவரை எந்த அதிகாரியும் வந்து பார்க்கவில்லை. அடிப்படை தேவைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். உடனடியாக அதிகாரிகள், எங்கள் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

மேலும் செய்திகள்