நீதா அம்பானி: தனிமைப் பொழுதுகளும்.. சந்தோஷ நினைவுகளும்..
ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியும், இந்திய தொழில் துறையின் முதல் பெண்மணியுமான நீதா அம்பானி, ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாமல் பரபரக்கும் பெண்மணி.;
ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியும், இந்திய தொழில் துறையின் முதல் பெண்மணியுமான நீதா அம்பானி, ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாமல் பரபரக்கும் பெண்மணி.
அவர், வீட்டில்- கணவர்- குழந்தைகளுடன் எப்படி தனது நேரத்தை பகிர்ந்துகொள்கிறார். இதோ, நீதாவே கூறுகிறார்...
சில ஆண்டுகளுக்கு முன்பு, ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாகக் குழுவில் முதல் பெண் இயக்குனராக நீங்கள் இணைத்துக்கொள்ளப்பட்டீர்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் வேலையை வீட்டுக்குக் கொண்டு வருவதுண்டா?
“எங்களின் இரட்டைக் குழந்தைகள் ஆகாஷ்- இஷா, இளைய மகன் ஆனந்தின் வளரும் பருவத்தில் நானும் கணவரும் வேலையைப் பற்றி வீட்டில் விவாதிக்க மாட்டோம். ஆனால், எங்களின் கல்விப்பணித் திட்டங்களில் எனக்குள்ள ஆர்வம் பற்றி எனது குழந்தைகளுக்குத் தெரியும். உண்மையில், அவர்களின் சிறுவயதில் நான் அவர்களை பள்ளி முடிந்து காரில் எனது அலுவலகத்துக்கே அழைத்துவந்து விடுவேன். அங்கு வைத்து அவர்கள் தங்கள் ஹோம் ஒர்க்கை முடிப்பார்கள். தற்போது அவர்கள் எல்லாம் படிப்பை முடித்து எங்கள் தொழில்களில் பல்வேறு பொறுப்புகளில் இணைந்துவிட்ட நிலையில், வீட்டில் தொழில் பற்றிப் பேசாமல் இருப்பது கடினமாயிருக்கிறது. அவர்களுடன் தொழில் விஷயமாகப் பேசுவதும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. நான் அவர்களை நிறையக் கவனிக்கிறேன், அவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்கிறேன். நான் தொழில்நுட்பத்தில் அவ்வளவு ஆர்வமானவள் கிடையாது. ஆனால் தற்போது அவர்கள் மூலமாக எல்லா ‘ஆப்’பும் எனக்குத் தெரியும். ‘ஜியோசாட்’ மூலமாக ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியைக் கூட கவனிக்கிறேன். எனது பிள்ளைகள், ஆட்களை நிர்வகிக்கும் விதமே வித்தியாசமாக இருக்கிறது. அவர்கள், ஊழியர்களுடன் நண்பர்களைப் போல இணைந்து பழகு கிறார்கள். எங்களின் இரட்டையர்கள்தான் ‘ஜியோ’வை கவனித்துக்கொள்கிறார்கள். அவர்களின் அலுவலகமே வித்தியாசமாக இருக்கும். அங்கே இளமைத் துடிப்பும் உற்சாகமும் பொங்கி வழியும். எல்லோரும் சரிசமமாக உட்கார்ந்து பேசுவார்கள், வெளிப்படையாக விவாதிப்பார்கள். ஆக, அங்கே வேலையில் ஒரு புத்தம்புது மாற்றம் தெரிகிறது. ஐடியாக்கள் கொட்டு கிறது, ஜாலியாகவும் இருக்கிறது”
நீங்களும் முகேஷ் அம்பானியும் திருமண வாழ்வில் இணைந்து 33 ஆண்டுகளாகிவிட்டன. உங்கள் வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன?
“ஆம், 33 ஆண்டுகளாகிவிட்டன. நிஜமாகவே, முகேஷ் இல்லாமல் என் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் எனது 21-வது வயதில் அவரது கரம் பிடித்தேன். இத்தனை ஆண்டுகாலத்தில் நாங்கள் எங்களின் நட்பையும் அன்பையும் பராமரித்து வந்திருக்கிறோம். முகேஷ் அமைதியானவர். மற்றவர்களிடமிருந்து விலகியிருப்பவர். ஆனால் நானோ நிறையப் பேரைச் சந்திக்க விரும்புபவள். எங்கள் இருவரில் அதிகம் பேசுபவள் நான்தான். குடும்பத்தின் மீது முகேஷ் அளவற்ற அன்பு கொண்டவர் என்ற வகையில் நான் அதிர்ஷ்டசாலி. குழந்தைகளை வளர்ப்பதிலாகட்டும், புதிய பள்ளிகளை உருவாக்குவது போன்ற பணிகளில் நான் தீவிரமாக ஈடுபட்டிருக்கும்போது குழந்தைகளுடன் நேரத்தைக் கழிப்பதிலாகட்டும், முகேஷுக்கு இணை முகேஷ்தான்”
இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டநிலையில் நீங்களும் உங்கள் கணவரும் ஒன்றாகக் கழிக்க அதிக நேரம் கிடைக் கிறதா?
“நாங்கள் சிறப்பான தருணங்களை முயன்று உருவாக்குகிறோம். கடந்த ஆண்டு நான் ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டிக்குச் சென்றிருந்தபோது, என்னைப் பார்ப்பதற்காகவே திடீரென்று மகன் ஆனந்துடன் அங்கு புறப்பட்டு வந்து விட்டார், முகேஷ். ரியோவில் திடீரென்று அவரைப் பார்த்ததும் என்னாலே என்னை நம்ப முடியவில்லை. நான் கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். இயற்கை மீதும், விளையாட்டு மீதும் நாங்கள் கொண்டிருக்கும் பொது ஆர்வமும் எங்களின் பிணைப்புக்கு உதவுகிறது. நேரம் கிடைக்கும்போது, நாங்கள் ஒன்றாக சுற்றுலா செல்வோம். வருடத்துக்கு இரண்டு முறையாவது குடும்பத்துடன் ஆப்பிரிக்காவுக்குப் பறந்துவிடுவோம். உலகத்தில் நமக்கு ஆப்பிரிக்காவைத் தவிர வேறு எதையும் தெரியாது என்று என் மகள் இஷா கூட சிரிப்பாள். இங்கே நம்மை சிங்கங்களுக்குக் கூட அடையாளம் தெரியும் என்று அவள் கிண்டலடிப்பாள். ஆனால், உலகத்தை விட்டு வெகு தூரம் விலகி அங்கே போய் இயற்கையின் அற்புதங் களுக்கு மத்தியில் இருப்பது சுவாரசியமான விஷயம்”
நீங்கள் எந்நேரமும் வேலை... வேலை என்றிருப்பவர் அல்ல. அன்றாட அலுவல்களை முடித்தபிறகு உங்களின் நேரம் எவ்வாறு கழியும்?
“வேலைக்குப் பின், நான் என் குழந்தைகளுடன் அரட்டையும் கலாட்டாவுமாக நேரத்தைக் கழிக்க விரும்புவேன். அப்போது, அவர்களின் நண்பர்களும் சேர்ந்துகொள்வார்கள். நான் நானாக இருக்கும் நேரம் அது. உதாரணத்துக்கு, சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியின்போது நாங்கள் விநாயகர் சிலையை மும்பை சவுபாத்தி கடலில் கரைப்பதற்காக எடுத்துச் சென்றோம். ஆனந்துக்கு பக்தி அதிகம். அதனால் அவன் சாலையில் ஆடிக்கொண்டு வர, நானும் அவனது நண்பர்களும் அந்த ஆட்டத்தில் இணைந்துகொண்டோம். எங்களைச் சுற்றி இயங்கும் உலகத்தைப் பற்றி எந்தக் கவலையுமின்றி ஆடித் தீர்த்தோம்.
நான் கடைசியாக எப்போது மனம் விட்டுச் சிரித்தேன் என்று யோசித்துப் பார்த்தால், சில நாட்களுக்கு முன் நடந்தது ஞாபகத்துக்கு வருகிறது. 2005-ம் ஆண்டின் பிரதிபலிப்பு போல கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் மழை கொட்டியதே, அப்போது. எங்கள் திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் தங்கியிருக்கும் மாணவ- மாணவிகள் எப்படியிருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக நள்ளிரவில் அங்கே போனேன். நான் சில பெண்குழந்தைகளுடன் உட்கார்ந்து பேசினேன். அவர்கள் ஜன்னல் திரைச்சீலைகளை மூடாமல் இருப்பதைப் பார்த்து ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நிறைய பேய்க்கதைகள் ஓடிக்கொண்டிருப்பதால், பயப்படாமல் இருப்பதற்காக வெளிச்சம் வரட்டும் என்று திரைச்சீலைகளை மூடாமல் இருப்பதாகக் கூறினார்கள். அன்றிரவு முழுவதும், அவர்கள் கூறிய பேய்க்கதைகளைக் கேட்பதிலேயே கழிந்தது. உண்மையிலேயே, அந்தக் கதைகளைக் கேட்டு நானும் பயந்துவிட்டேன்!”
உடம்பை மிகவும் கச்சிதமாக வைத்திருக்கிறீர்கள். ரொம்ப கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்கிறீர்களா?
“உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் விஷயத்தில் நான் என் மகன் ஆனந்துக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன். சிறுவயதில் இருந்தே அதிக உடல் பருமனால் அவதிப்பட்டு வந்தவன் அவன். இன்று, தனது 21 வயதில் 135 கிலோ எடையை இயற்கையாகக் குறைத்து எனக்கே ஒரு முன்மாதிரியாகிவிட்டான். உடற்பயிற்சியை ஒரு வேலையாகக் கருதக்கூடாது என்பது என் எண்ணம். அது வாழ்வின் அங்கம். பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் 92 கிலோ இருந்தேன். ஆனால் கடந்த பல ஆண்டு களாக 59 கிலோவாக எனது எடையைப் பராமரித்து வருகிறேன். நான் தினமும் ஒரு மணிநேரத்தை நீச்சல், நடனம், ஜிம் போன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சிக்கு ஒதுக்கிவிடுகிறேன். உடற்பயிற்சி செய்யாமல் வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைப்பதில்லை”
நீங்கள் வாழ்வில் பின்பற்றும் வாக்கியம்...?
“நான் நிறைய வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும்.
உறங்குவதற்கு முன் பல மைல்களை கடக்க வேண்டும்...”
புன்னகைமாறாமல் தன் எண்ணங்களை வெளிப்படுத்தி நிறைவு செய்கிறார்!