டோலியின் யோகாசனம்
யோகாசனம் செய்வதற்கு உடல் பருமன் ஒரு பிரச்சினையே இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார், டோலி சிங். குண்டான உடல்வாகு கொண்டிருக்கும் இவர் அனைத்து வகையான யோகாசனங்களையும் எளிமையாக செய்து அசத்துகிறார்.;
யோகாசனம் செய்வதற்கு உடல் பருமன் ஒரு பிரச்சினையே இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார், டோலி சிங். குண்டான உடல்வாகு கொண்டிருக்கும் இவர் அனைத்து வகையான யோகாசனங்களையும் எளிமையாக செய்து அசத்துகிறார். யோகாசன செய்முறைகளுக்கு ஏற்ப அவருடைய பருமனான உடல் பாகங்கள் சுலபமாக வளைந்து கொடுக்கின்றன.
34 வயதான டோலி மும்பையை சேர்ந்தவர். 6 ஆண்டுகளுக்கு முன்பு டோலி 90 கிலோ உடல் எடை கொண்டிருந்திருக்கிறார். பெங்களூருவுக்கு சென்று அங்கு மலையேற்ற பயிற்சி மேற்கொண்டபோது கால் இடறி கீழே விழுந்துவிட்டார். அதனால் காலில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டிருக்கிறார். அப்போது படுத்த படுக்கையாக இருந்ததால் உடல் எடை மேலும் அதிகரித்திருக் கிறது.
அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள், உடல் எடையை கட்டாயம் குறைத்தே ஆக வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை குறைப்பதற்கு முயற்சி மேற்கொண்டிருக்கிறார். அப்போது யோகா ஆசிரியர் ஒருவரை சந்தித்திருக்கிறார். அவர் கட்டுக்கோப்பான உடல்வாகுவுடன் காட்சி அளிப்பதற்கு யோகாதான் காரணம் என்பதை அறிந்தவர், தானும் அதனை கற்றுக்கொள்வதற்கு முடிவு செய் திருக்கிறார்.
“முதல் நாள் யோகா வகுப்புக்கு சென்றபோது அங்கு பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த ஒல்லியானவர்களை பார்த்ததும் எனக்குள்ளே ஒருவித தயக்கம் ஏற்பட்டது. குண்டாக இருந்த என்னால் அவர்களைப் போன்று ஆசனங்களை செய்ய முடியாது என்று நினைத்தேன். முதல் மூன்று வகுப்புகள் மிகவும் கடினமாக அமைந்தன. கஷ்டப்பட்டு யோகா பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கினேன். உடலில் ஒருவிதமான சோர்வு வெளிப்பட்டது. அதேவேளையில் உடல் நெகிழ்வுத்தன்மை பெறவும் தொடங்கி விட்டது. யோகா மீது நான் கொண்டிருந்த ஆர்வத்தால் சிரமங்கள் எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. நானும் சிரமப்பட்டு மற்றவர்களை போல் கடினமான பயிற்சிகளை செய்ய தொடங்கினேன். அதை பார்த்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். வியப்புடன் என்னை பார்த்தார்கள். உற்சாகம் வழங்கினார்கள். யோகாசன ஆசிரியரும் எனக்கு ஊக்கமளித்தார். அதுதான் எனக்கு யோகாசனத்தின் மீது அளவுக்கு அதிகமான காதலை உருவாக்கிவிட்டது” என்கிறார், டோலி.
இவர் வீட்டில் இருந்தபடியே சமூக வலைத்தளங்கள் வழியாகவும் பல்வேறு வகையான யோகாசனங்களை கற்றுத் தேர்ந்திருக் கிறார். இவர் செய்யும் யோகாசனங்கள் பார்க்க பரவசமூட்டு கின்றன.
“நான்கு மாதங்கள் யோகாசன வகுப்புக்கு தினமும் சென்றேன். திடீரென்று ஒரு நாள் எனக்கு பயிற்சி அளித்து வந்த ஆசிரியர் வேறு இடத்துக்கு சென்றுவிட்டார். அவரிடம் பயிற்சி நுணுக்கங்களை கற்றபோது கிடைத்த மன நிறைவு அதன் பிறகு கிடைக்கவில்லை. அதனால் வகுப்புக்கு செல்லும் ஆர்வம் குறைந்தது. அதே நேரத்தில் மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலும் ஏற்பட்டது. என்னுடைய ஆர்வத்திற்கு இணையதளங்கள் கைகொடுத்தன. யோகாசன வீடியோக்களை பதிவிறக்கம் செய்து நானே சுயமாக பயிற்சி செய்ய தொடங்கினேன். அந்த வீடியோக்கள் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொடுத்தன. 80 சதவீத யோகாசனங்களை வீடியோக்கள் பார்த்துதான் கற்றுக்கொண்டேன்” என்கிறார்.
தன்னுடைய யோகாசன பயிற்சிகளை வீடியோ எடுத்து இணைய தளங்களிலும் பரப்பி வருகிறார். டோலியின் யோகாசன முயற்சிக்கு பலனும் கிடைத்திருக்கிறது. 90 கிலோ எடை இருந்தவர், தற்போது 72 கிலோவாக உடல் எடையை குறைத்திருக்கிறார்.
எல்லா வயதினரும், எத்தகைய உடல்வாகு கொண்டவரும் யோகாசனம் கற்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இணையதளத்தில் உலவ விட்டிருப்பதாக கூறுகிறார். அதற்கு எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்துகொண்டிருக்கின்றன.
“சிலர் என்னுடைய யோகாசன வீடியோக்களை பார்த்து கேலி, கிண்டல் செய்கிறார்கள். மோசமான கருத்துகளையும் பதிவு செய்கிறார்கள். பாராட்டு விமர்சனங்களே அதிகமாக இருப்பதால் அதை நான் பொருட்படுத்துவதில்லை” என்கிறார்.