மூலிகை இயந்திர விஞ்ஞானி
சில்லென்று சுவாசத்தில் கலந்த மாசுபடாத தூய்மையான காற்று... பறவைகளின் சங்கீதம்.... சுற்றிலும் பசுமை போர்த்திக்கிடக்கும் இதமான மரங்களின் நிழல்... இதற்கு நடுவே செல்லும் பாதையில் களைப்பே தெரியாமல் உற்சாகமாக பயணம் மேற்கொண்டது பழைய தலைமுறை!
சில்லென்று சுவாசத்தில் கலந்த மாசுபடாத தூய்மையான காற்று... பறவைகளின் சங்கீதம்.... சுற்றிலும் பசுமை போர்த்திக்கிடக்கும் இதமான மரங்களின் நிழல்... இதற்கு நடுவே செல்லும் பாதையில் களைப்பே தெரியாமல் உற்சாகமாக பயணம் மேற்கொண்டது பழைய தலைமுறை! இன்றைய அவசர உலகில் சில நூறு கிலோ மீட்டர்களையும் சில மணி நேரங்களில் கடக்க முடிகிறது. ஆனால் வாகனங்கள் உமிழும் நச்சுப்புகை சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கிறது. சுவாசத்தில் கலந்து வியாதிகளுக்கு வித்திட்டு ஆயுளை குறைக்கவும் வழிவகுக்கிறது. வாகனங்களால் காற்றில் கலக்கும் மாசுவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாக தனது கண்டுபிடிப்பு மூலம் வாகனங்கள் வெளியிடும் நச்சுப்புகையை கட்டுப்படுத்தும் கருவியை வடிவமைத்திருக்கிறார், திருவருள்செல்வன்.
15 வயதான திருவருள் செல்வன், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர். அங்குள்ள ஆர்.கே.ஆர். கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தந்தை கருணாநிதி எலக்ட்ரீசியன். தாயார் மங்கையர்கரசி ஆசிரியை. வாகன பெருக்கத்தால் அதிகரித்து வரும் காற்று மாசுவுக்கு கடிவாளமிடும் வகையில் திருவருள்செல்வன் உருவாக்கியுள்ள ‘சைலன்டர்’ என்ற கருவி மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த கருவியின் செயல்பாடு குறித்து திருவருள்செல்வன் சொல்ல கேட்போம்.
“காற்று மாசுபடுவதற்கு வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் முக்கிய காரணமாக உள்ளது. வாகனங்களின் புகை மாசு பி.பி.எம். என்ற அளவில் அளவீடு செய்யப்படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் வாகனப்புகை மாசு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக இருந்தால் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிக்கு தண்டனை வழங்கப்படுகிறது.
வாகனப்புகையில் நைட்ரஸ் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, ஹைட்ரோ கார்பன் ஆகிய வாயுக்கள் கலந்திருக்கின்றன. இதில் நைட்ரஸ் ஆக்சைடு சுவாசத்தில் கலந்து நரம்புத் தளர்ச்சி உருவாக வழிவகுத்துவிடும். கார்பன் மோனாக்சைடை தொடர்ந்து சுவாசித்தால் உயிரிழப்பு ஏற்படும். சல்பர் டை ஆக்சைடு அமில மழைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.
வாகன புகையால் ஏற்படும் காற்று மாசுவை குறைக்கும் விதமாக சைலன்டர் என்ற கருவியை வடிவமைத்தேன். சைலன்ஸர் மற்றும் பில்டர் என்பதன் சுருக்கமே சைலன்டர். இந்த கருவியை வாகனங்களில் சைலன்ஸர் இருக்கக்கூடிய இடத்தில் பொருத்துவதன் மூலமாக காற்று மாசுவை பெருமளவு கட்டுப்படுத்த முடியும். இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளோடு சார்க்கோல்(கரி), ஸ்பாஞ்ச்(பஞ்சு) போன்ற பொருட்களை பயன்படுத்தி வடிவமைத்துள்ளேன்.
கார்பன் மோனாக்சைடில் உள்ள கார்பனையும், ஆக்சிஜனையும் பிரிக்கும் பணியை சைலன்டருக்குள் இருக்கும் கற்றாழை, எத்தனால் கலவை மேற்கொள்ளும். நைட்ரஸ் ஆக்சைடை சிலந்தி ஆலைச்செடி சுத்திகரிக்கும். கார்பன் துகள்களை சுத்திகரிக்க பில்டர் பேப்பர், ஸ்பாஞ்ச் உதவுகிறது. சைலன்ஸருக்கு உள்ளே செல்லும் காற்றில் உள்ள மாசின் அளவையும், வெளியேறும் மாசு அளவையும் அளவீடு செய்ய கண்காணிப்பு சாதனங்களும் உள்ளன. மேலும் சைலன்ஸரில் உருவாகும் வெப்பத்தை குறைக்க அலுமினியம் ஹீட்சிங்க் உள்ளிட்ட சுத்திகரிப்பு முறைகளை பொருத்தியுள்ளேன். இதன் மூலம் வாகன புகையினால் ஏற்படும் காற்று மாசுவின் அளவை பெருமளவு குறைக்க முடியும்” என்று உற்சாகம் பொங்க கூறுகிறார்.
திருவருள்செல்வனின் ‘சைலன்டர்’ கருவி கரூரில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசை வென்றிருக்கிறது. இதன் மூலம் ஐதராபாத்தில் ஜனவரி மாதம் நடைபெறும் தென்னிந்திய அளவிலான போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறுவயதிலேயே திருவருள்செல்வனின் கைவண்ணத்தில் சிறியவகை மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்கள் காட்சி பொருளாய் சுழல தொடங்கியிருக்கின்றன. ஆசிரியையான மங்கையர்கரசி மகனின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். மகனுக்குள் புதைந்திருந்த கண்டுபிடிப்பு ஆர்வம் குறித்து மங்கையர்கரசி சொல்வதை கேட்போம்:
“நானும், என் கணவரும் வேலை விஷயமாக வெளியே செல்வதால், சிறுவயதில் இருந்தே என் மகன் தனிமையில் இருக்க பழகிவிட்டான். ஆனால் எந்த குறும்பும் செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்து ஏதாவது பொருளை எடுத்து ஆராய்ந்து கொண்டிருப்பான். 3-ம் வகுப்பு படிக்கும்போது வீணான பொருட்களை கொண்டு மினி மிக்ஸி, மினி கிரைண்டர் செய்தான். சிறியவகை எலக்ட்ரானிக் சாதனங் களை பயன்படுத்தி வாஷின் மிஷின் தயார் செய்து, அதனுள் துணிக்கு பதிலாக பேப்பரை சலவை செய்வது போல வடிவமைத்திருந்தான். விடுமுறை நாட்களிலும் வெளியே விளையாட செல்ல மாட்டான். செல்போனிலும் விளையாட மாட்டான். அதில் இருக்கும் அப்ளிகேஷன்களை ஆராய்ந்து கொண்டிருப்பான்.
அவன் மின்சாதனங்களில் ஒயர்களை இணைத்து பரிசோதித்ததை பார்த்து முதலில் நான் பயந்து போனேன். ஒயர்களை ஒட்டவைக்கும்போது கைகளில் கொப்பளங்கள் ஏற்பட்டு அவதிப்பட்டான். அதை பார்த்து கடும் கோபம் அடைந்தேன். இனி இதுபோன்று எதுவும் செய்து பார்க்கக்கூடாது. படிக்கும் வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்று கடுமையாக திட்டினேன். எனக்கு முன்பாக பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்துவிடுவான் என்பதால் அவனுடைய நடவடிக்கைகளை என்னால் கண் காணிக்கமுடியவில்லை.
முதலில் அவன் எனக்கு தெரியாமலேயே சிறு, சிறு கண்டுபிடிப்புகளை உருவாக்க தொடங்கிவிட்டான். நான் படிப்பில் மட்டும் கவனம் செலுத்து மாறு கட்டாயப்படுத்தினேன். அவனுக்கு கண்டுபிடிப்புகள் மீது ஆர்வம் இருப்பதை அறிந்ததும் அவன் விருப்பப்படி செயல்பட அனுமதித்தேன். நான் அறிவியல் பாடங்கள் நடத்தி வந்ததால் என்னிடம் சந்தேகம் கேட்க தொடங்கினான். நாளடைவில் நானே அறிந்திராத வகையில் அறிவியல் தகவல்களை திரட்டி விட்டான். அதை தன் கண்டுபிடிப்புகளுக்கு மூலதனமாக்கிவிட்டான்” என்கிறார்.
திருவருள்செல்வன் சைலன்டர் கருவியை கண்டுபிடிக்கும் முன்பு மங்கையர்கரசியிடம் காற்று மாசு குறித்து விவாதித்திருக்கிறான். ஆனால் அவன் மாசுவை கட்டுப்படுத்தும் கருவியை உருவாக்கப்போகிறான் என்பது மங்கையர்கரசிக்கு ஆரம்பத்தில் தெரியாமலேயே இருந்திருக்கிறது.
“நாங்கள் குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தோம். அப்போது சாலையோரத்தில் அரளி செடிகள் வரிசையாக நடவு செய்யப்பட்டிருந்தன. ‘எதற்காக இந்த செடிகளை நட்டு வைத்திருக்கிறார்கள்?’ என்று என்னிடம் கேட்டான். நான், ‘அரளி செடி காற்றில் உள்ள மாசுவை உறிஞ்சும் தன்மை கொண்டது. அது காற்று மாசுவை கட்டுப்படுத்துவதால் நட்டு வைத்திருக்கிறார்கள்’ என்றேன். அதை கேட்டதும் அவனுக்குள் சாலைகளில் செல்லும் வாகனங்களில் இருந்து காற்று மாசுவை கட்டுப்படுத்தும் கருவியை உருவாக்கும் எண்ணம் தோன்றியிருக்கிறது. வீட்டிற்கு சென்றதும் மாசுவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட செடிகளை பட்டியல் எடுத்து என்னிடம் கூறினான். அப்போதுதான் எனக்கு இவ்வளவு செடிகளுக்கு காற்றில் கலக்கும் மாசுவை உறிஞ்சும் ஆற்றல் இருக்கிறது என்பது தெரியவந்தது. அவன் என்னிடம், ‘அரளி செடி விஷத்தன்மை கொண்டதுதானே. என்னுடைய கண்டுபிடிப்புக்கு சிலந்தி ஆலை செடியை பயன்படுத்திக்கொள்கிறேன்’ என்றான். அப்போதுதான் அவனுடைய கண்டுபிடிப்பு பற்றி எனக்கு தெரியவந்தது.
அவனுடைய முயற்சியை பாராட்டி தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தோம். சில பொருட்களை இணையதளம் வழியாக அவனே ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டான். என்னுடைய தம்பி மாதவ கிருஷ்ணன் தனியார் மருத்துவ மனையில் சுற்றுப்புற சுகாதார ஆய்வாளராக இருக்கிறார். அவர் ‘சுற்றுப்புற மேலாண்மை சார்பாக எனக்கே தெரியாத விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறான்’ என்று ஆச்சரியப்பட்டார். அவனுடைய சைலன்டர் கருவி மாநில அளவில் முதல் பரிசை பெற்றிருப்பதும், சமூகத்திற்கு பயனுள்ளதாக இருப்பதும் இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கண்டுபிடிப்பின் அடுத்தகட்டமாக சைலன்டரில் எவ்வளவு மாசு பதிவாகி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான்” என்று பெருமிதம் கொள்கிறார்.
திருவருள்செல்வனுக்கு இஸ்ரோ அல்லது அமெரிக்காவின் நாசாவில் விஞ்ஞானியாக வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கிறது.
“அவனை மருத்துவராக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது. என் கணவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்று விருப்பப்பட்டார். அவன் கண்டுபிடிப்புகளில் ஆர்வமாக இருப்பதால் அவன் விருப்பத்திற்கே விட்டுவிட்டோம். படிப்பிலும் சுட்டியாக இருக்கிறான். இப்போது அவன் 10-ம் வகுப்பு படிப்பதால் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய ஆசிரியை பணியை ராஜினாமா செய்துவிட்டேன். நான் அருகில் இருப்பதால் கண்டுபிடிப்பு சம்பந்தமான தேடலுக்கும் உதவியாக இருக்க முடிகிறது” என்கிறார்.
திருவருள்செல்வனின் கண்டுபிடிப்புகள் விவசாய நலன் சார்ந்ததாகவும் அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் திருவருள்செல்வனின் படைப்பான ‘க்ரோ வெல்’ படைப்பு முதலிடத்தை வென்றுள்ளது. தோட்டத்தில் பயிர்கள் தண்ணீரின்றி கருகுவதை தடுத்தல், நீர்மேலாண்மை, மகசூலை அதிகரித்தல், காற்று மாசு தவிர்த்தல் போன்ற விஷயங்களையும் உள்ளடக்கியே ஜி.எஸ்.எம். உதவியுடன் இயங்கும் இந்த கருவியை உருவாக்கியுள்ளார். அதுபற்றி திருவருள்செல்வன் சொல்கிறார்:
“மண்ணின் ஈரப்பதம் மற்றும் அந்த பகுதியில் உள்ள தட்பவெப்ப நிலையை அளவிடும் வகையில் கருவியை உருவாக்கி இருக்கிறேன். செடிகளுக்கு போதுமான அளவில் ஈரப்பதம் கிடைக்கவில்லை என்றால் செல்போனுக்கு அழைப்பு வரும் விதத்தில் அதனை வடிவமைத்திருக்கிறேன். தோட்டத்தின் உரிமையாளரால் பயிர்களை பார்வையிட முடியாமல் வெளியூரில் இருக்கும்பட்சத்தில் பயிர்கள் நீர் இன்றி வாடினால் அவருடைய செல்போன் எண்ணுக்கு அழைப்பு செல்லும். அந்த அழைப்பை துண்டித்து விட்டு மீண்டும் அதே எண்ணுக்கு தொடர்பு கொண்டால் தோட்டத்தில் உள்ள செல்போனில் ‘சவுண்ட் எனர்ஜி’ சிக்னலாக மாற்றப்பட்டு மின்மோட்டாரை இயங்க வைக்கும். இதைதொடர்ந்து விளைநிலங்களில் பொருத்தப்பட்டுள்ள நீர்த்தெளிப்பான் மூலம் பயிர்களுக்கு நீர் சென்றடையும். எங்கிருந்தும் மின்மோட்டாரை இயக்க முடியும் வகையில் உருவாக்கியிருக்கிறேன். மேலும் மகசூலை அதிகப்படுத்துதல், காற்று மாசுபடுவதை தவிர்த்தல் ஆகிய இரண்டு செயலிகளையும் எளிமையாக செயல்படுத்த முடியும். தாவரங்களுக்கு சூரிய ஆற்றல் பகல் நேரத்தில் கிடைப்பதால் ஒளிச்சேர்க்கை மூலம் உற்பத்தி நடக்கிறது.
பகல் நேரத்தில் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி ஆக்சிஜனை தாவரங்கள் வெளியிடும். பெரும்பாலான தாவரங்கள் இரவு நேரத்தில் ஆக்சிஜனை உள்வாங்கி கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. இதை தவிர்ப்பதற்காக சூரியஒளி குறைந்தவுடன் தானாகவே இயங்கும் வகையில் ஹாலோஜன் விளக்குகளை தோட்டங்களில் பொருத்தலாம். இதன் மூலம் இரவிலும் தாவரங் களில் ஒளிச்சேர்க்கை நடக்கும். மகசூலும் அதிகரித்து காற்று மாசுவை குறைக்கலாம். இந்த ஹாலோஜன் விளக்குகளை சுற்றி பொறி வைக்கும்போது பயிர்களுக்கு பாதிப்பை ஏற் படுத்தும் பூச்சிகள் அதில் சிக்கிக்கொள்ளும். என்னுடைய கண்டுபிடிப்புகளுக்கு பெற்றோரும், பள்ளி நிர்வாகத்தினரும் உறுதுணையாக இருக்கிறார்கள். வாகன தயாரிப்பு நிறுவனங் களும், அரசும் ஒத்துழைத்தால் வாகனப்புகையால் ஏற்படும் மாசை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும்” என்றார்.