வாலாஜாபாத் அருகே வரதாபுரம் ஏரியில் உடைப்பு

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஓன்றியம் பழையசீவரம் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வரதாபுரம் ஏரி உள்ளது.

Update: 2017-11-04 23:09 GMT

வாலாஜாபாத்,

கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக 12 அடி கொள்ளளவு கொண்ட வரதாபுரம் ஏரி நிரம்பியது. இந்த நிலையில் வரதாபுரம் ஏரி நீர்வரத்து அதிகமானதையடுத்து ஏரியின் மதகு அருகே திடீரென உடைப்பு ஏற்பட்டு ஏரியின் நீர் மள மளவென வெளியேறியது.

இது குறித்து அறிந்த காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. ராஜூ, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டேயன் மேற்பார்வையில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மணல் மூட்டைகளை கொண்டு உடைப்பை அடைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஈடுபட்டனர். வாலாஜாபாத் தாசில்தார் சுமதி, வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் சுமா ஆகியோர் கிராம மக்களை திரட்டி ஏரியின் உடைப்பை சரிசெய்யும் பணியை துரிதப்படுத்தினார்.

ஏரியின் கரை உடைந்ததால் நீர் மளமளவென வெளியேறி அறுவடைக்கு தயாராக இருந்த 200 ஏக்கர் நெல்பயிர் சேதம் அடைந்தது.

மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு விவசாய நிலங்களை பாதுகாக்கவும், சேதம அடைந்த நெல்பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்