குடோன்களில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டியில் 2 குடோன்களில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியில் 2 குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் தடா அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை தடா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கும்மிடிப்பூண்டியில் இருந்து தடா நோக்கி வந்த காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அந்த காரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் 12 பண்டல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தடா போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் புதுகும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பாஸ்கர் (வயது 43) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கும்மிடிப்பூண்டியில் ரெட்டம்பேடு சாலையில் உள்ள என்.எம்.எஸ். நகரில் 2 தனியார் குடோனில் பல லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அங்கிருந்து சென்னையின் புறநகர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள சில பகுதிகளுக்கு இவற்றை விற்பனைக்காக எடுத்துச்செல்வதும் தெரியவந்தது.
இதனையடுத்து தடா போலீசார், கும்மிடிப்பூண்டியில் உள்ள அந்த 2 தனியார் குடோன்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் 35 பண்டல்களை பறிமுதல் செய்து வேனில் தடாவிற்கு ஏற்றிச்சென்றனர்.
இந்த பொருட்களை பதுக்கிவைத்திருந்ததாக பொன்னேரியைச் சேர்ந்த மோகன் (42) என்பவரையும் தடா போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.10 லட்சம். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்படி கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள சில மளிகை கடைகளில் கும்மிடிப்பூண்டி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 40 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.