திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை: 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் திருத்துறைப்பூண்டிஉள்ள மாணவிகள் தங்கும் விடுதியில் தண்ணீர் புகுந்தது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி முதல் மழை தொடங்கி கடந்த 6 நாட்களாக இடைவிடாமல் பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேலும் மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் குளங்கள், குட்டைகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கின்றன. பல இடங்களில் வடிகால் தூர்வாராததால் சம்பா நடவு செய்த விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நிற்கின்றது. இதனால் நேரடி விதைப்பு செய்யப்பட்ட இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. வயல்களில் தேங்கிய நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல திருத்துறைப்பூண்டியில் நேற்றுமுன்தினம் முதல் விடிய, விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் திருத்துறைப்பூண்டி நகரம் முழுவதும் வெள்ள காடாக காட்சி அளிக்கிறது. இதில் சண்முகசெட்டித்தெரு, பொன்னையன் செட்டித்தெரு, வானகாரத்தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் புகுந்து இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. மேலும் 50-க்கும் மேற்பட்ட வீடுகளிலும், அங்குள்ள ஆதிதிராவிடர் மாணவிகள் தங்கும் விடுதியிலும் தண்ணீர் புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் நாகராஜன், சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் இறைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நன்னிலம் தாலுகாவில் உள்ள நெம்மேலி கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி தெருவில் உள்ள தொகுப்பு வீடுகள் பழுதடைந்த நிலையில் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 வீடுகளில் இருந்த 80-க்கும் மேற்பட்ட பொதுமக்களை, அதிகாரிகள் பாதுகாப்பாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைத்தனர். இதேபோல முடிக்கொண்டான் சமத்துவபுரம் அருகே உள்ள தெருவில் 12 குடிசை வீடுகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. அந்த வீடுகளில் இருந்த 43 பேர் முடிக்கொண்டான் ஒருங்கிணைந்த உயர்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல வலங்கைமான், நீடாமங்கலம், கோட்டூர், மன்னார்குடி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
திருவாரூர்-55, நன்னிலம்-50, குடவாசல்-37, வலங்கைமான்-35, பாண்டவையாறு தலைப்பு-39, மன்னார்குடி-38, நீடாமங்கலம்-38, திருத்துறைப்பூண்டி-127, முத்துப்பேட்டை-46. இதில் அதிகபட்சமாக திருத் துறைப்பூண்டி-127 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.