அதிகாரிகள் சீர் செய்யாததால் சாலையில் தேங்கிய சேற்றை அகற்றி மாதர் சங்கத்தினர் போராட்டம்

அதிகாரிகள் சீர் செய்யாததால் சாலையில் தேங்கிய சேற்றை அகற்றி மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-11-04 22:45 GMT
மன்னார்குடி,

மன்னார்குடி அருகே உள்ள சவளக்காரன் கிராமத்தில் உள்ள கீழத்தெருவில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் இப்பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரசினர் தொடக்கப்பள்ளி, அரசினர் மாணவிகள் விடுதி, அங்கன்வாடி, கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், நியாய விலைக்கடை ஆகியவை இயங்கி வருகின்றன. இந்த சாலையை தினமும் 700-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை பழுதடைந்து சேறும், சகதியுமாய் மாறியுள்ளது. இதுகுறித்து மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சவளக்காரன் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தெரு சாலை, மயானசாலை, பள்ளிக்கூட சாலை ஆகியவைகளும் பழுதடைந்துள்ளன. இதனை உடனே சரி செய்திட வேண்டும் என வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் சாலையில் தேங்கியிருந்த சேற்றை தட்டுகளை வைத்து அகற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்