வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை வெளிநாடு செல்ல பணம் கொடுத்து ஏமாந்ததால் விபரீத முடிவு

நித்திரவிளை அருகே வெளிநாடு செல்ல பணம் கொடுத்து ஏமாந்து போனதால் மனம் உடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-11-04 22:15 GMT
நாகர்கோவில்,

நித்திரவிளை அருகே ஆலம்பாறையை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 31), கூலி தொழிலாளி. இவருக்கு லீலா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். ஜோஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அதன் பின்பு ஊருக்கு வந்தவர் கூலி வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில், மீண்டும் வெளிநாடு செல்வதற்காக முயற்சி மேற்கொண்டார். இதற்காக ஒருவரிடம் பணம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டவர், வெளிநாட்டுக்கு அழைத்து செல்லவில்லை. அத்துடன் பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இதனால், ஜோஸ் மனமுடைந்து காணப்பட்டார்.

தற்கொலை

நேற்று முன்தினம் இரவு ஜோஸ் வழக்கம்போல் தூங்க சென்றார். நேற்று காலையில் வெகுநேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அறைக்குள் சென்று பார்த்த போது, அங்கு ஜோஸ் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார். வெளிநாடு செல்ல பணம் கொடுத்து ஏமாந்து போனதால் ஜோஸ் தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்