கண்ணமங்கலம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கண்ணமங்கலம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2017-11-04 22:30 GMT
கண்ணமங்கலம்,

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் ரேஷன் கடை முன்பு நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், ரேஷன் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சர்க்கரை விலை உயர்வை கண்டித்தும், மீண்டும் சர்க்கரையை பழைய விலையில் வழங்கக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்