தீபாவளிக்கு பட்டாசு வெடித்த மாணவ-மாணவிகளுக்கு தண்டனை: பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
தீபாவளிக்கு பட்டாசு வெடித்த மாணவ- மாணவிகளுக்கு தண்டனை வழங்கிய விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருச்சி,
கடந்த மாதம் 18-ந் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை முடிந்து ஒருநாள் விட்டு கடந்த மாதம் 20-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. திருச்சி கீழப்புதூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் காலையில் வழக்கம்போல் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். பள்ளியில் இறை வணக்கம் தொடங்கியது. அப்போது தீபாவளிக்கு பட்டாசு வெடித்த மாணவர்கள் கைகளை தூக்கும்படி கூறி உள்ளனர்.
7 பேரை தவிர, மற்ற மாணவர்கள் அனைவரும் கையை தூக்கி உள்ளனர். இதையடுத்து பட்டாசு வெடிக்காத மாணவர்கள் 7 பேருக்கு மட்டும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மற்ற மாணவ-மாணவிகளை தலையை குனிந்து நில்லுங்கள் என்று கூறி உள்ளனர். மேலும், தீபாவளிக்காக கையில் மெகந்தி வைத்து இருந்த ஒரு மாணவியை உடற்கல்வி ஆசிரியர் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
அன்றைய தினம் மாலை பள்ளி முடிந்ததும் வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் இது பற்றி பெற்றோரிடம் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் பா.ஜனதா கட்சியை சேர்ந்த சிலர் 21-ந் தேதி காலை பள்ளிக்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். தீபாவளிக்கு பட்டாசு வெடித்த மாணவ-மாணவிகளுக்கு எப்படி தண்டனை கொடுக்கலாம் என கேள்வி எழுப்பினர்.
மேலும், இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் விமலா விசாரணை நடத்தினார். இந்த விசாரணையை தொடர்ந்து மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பரிந்துரையின்பேரில் பள்ளி தலைமை ஆசிரியை லில்லி, உடற்கல்வி ஆசிரியர் ஆண்ட்ரோ ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.